பா.ஜ.க 359 தொகுதிகளை கைப்பற்றும்: அனல் பறக்கும் இந்திய தேர்தல் களம்

பா.ஜ.க 359 தொகுதிகளை கைப்பற்றும்: அனல் பறக்கும் இந்திய தேர்தல் களம்

இந்தியாவில் மக்களவைத்த தேர்தல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் பா.ஜ.க 359 தொகுதிகளை கைப்பற்றும் என ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் இன்று மாலை 05 மணி வரை 65% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பீஹார், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 60.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஜாதவ்பூர் தொகுதியில் உள்ள பங்கரில் உள்ள சதுலியா பகுதியில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி மற்றும் சிபிஐஆதரவாளர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றதாக கூறப்பட்டது.

இதன்போது போது பலர் காயமடைந்ததுடன் மோதல் வன்முறையாக மாறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலியில் சிலர் வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைப்பற்றி அருகிலுள்ள குளத்தில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This