பலமான வேட்பாளரை முன்னிறுத்த தயாராகும் பெரமுன; ஐ. ம.ச உறுப்பினர்கள் ரணிலுடன் கைக்கோர்ப்பார்களா?

பலமான வேட்பாளரை முன்னிறுத்த தயாராகும் பெரமுன; ஐ. ம.ச உறுப்பினர்கள் ரணிலுடன் கைக்கோர்ப்பார்களா?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து குறைந்தது 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளாவிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியான பலமான வேட்பாளரை முன்னிறுத்த தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாத இறுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல மாநாடுகள் நடைபெறவுள்ளதுடன்,அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த மாநாட்டில் வேட்பாளர் ஒருவரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காலவகாசம் நிறைவடைந்தததன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என அரசியல் மேடைகளில் பேசப்படுகின்றது.

இதேவேளை,பெரமுனவின் வேட்பாளர்கள் குறித்த கலந்துரையாடல்கள் தொடரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் மாநாடுகளும் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் அந்த கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்த கட்சித் தலைவர்களால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This