மலையகப் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்திச் செய்யப்பட வேண்டும்

மலையகப் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் நிவர்த்திச் செய்யப்பட வேண்டும்

தேசபந்து இரா. சிவலிங்கம்

இலங்கை முழுவதையும் 1815 ஆம் ஆண்டு பிரித்தானியர் கைப்பற்றினர். 1796 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தாலும் கூட கண்டி இராச்சியத்தை கைப்பற்றும் வரை பிரித்தானியர் போராடினர். அவர்களால் கண்டி இராச்சியத்தை இலகுவில் கைப்பற்ற முடியவில்லை. பல பிரதானிகளின் காட்டிக் கொடுப்பால் கண்டி இராச்சியம் வீழ்ந்தது. கண்டி அரசனாக இருந்த இரண்டாம் இராஜசிங்கன் உள்நாட்டு பிரதானிகளினாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டான். இலங்கை முழுவதும் பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர். இலங்கையிலே பெருந்தோட்டப் பயிர்களை அறிமுகப்படுத்தினர். முதலாவதாக கோப்பி பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்தினர் பின்னர் அந்த பயிரில் ஏற்பட்ட வெளிரல் நோயின் காரணமாக அதற்கு மாற்றீடாக தேயிலைப் பயிர்களை அறிமுகப்படுத்தினர். இந்த தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக சிங்கள மக்கள் முன் வராத போது, விரும்பாத சந்தர்ப்பத்தில். பெரியகங்கானிகளால் ஆள் தேடி அலையும் ஒரு பட்டாளம் உருவானது. இந்த பெரிய கங்கானிமார்கள். தென்னிந்திய கிராமங்களுக்குச் சென்று பல வாக்குறுதிகளையும்ää ஆசை வார்த்தைகளையும் கூறி தென்னிந்திய கிராமங்களில் இருந்து மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த மக்கள் இலங்கைக்கு வருகைத் தந்து 200 வருடங்களாகின்றன. இம் மக்களே இன்று மலையக மக்கள் என பெயர் கூறி அழைக்கப்படுகின்றனர்.

இன்றும் கூட மலையகப் பெருந்தோட்டப் பிரதேசங்களிலே பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளின் கட்டடங்கள் காணப்படுவதை காணலாம். ஒவ்வொரு தோட்டப் பிரிவுகளுக்கும் அல்லது ஒன்று,  இரண்டு தோட்டப் பரிவுகளுக்கும் பாடசாலைகள் இருப்பதை அவதானிக்கலாம். பிரித்தானியர் தோட்டங்களில் தோட்டப் பாடசாலைகளை ஆரம்பித்தன் நோக்கம் தேயிலைக் கன்றுகளை தோட்டத்து பிள்ளைகள்ää சிறுவர்கள் சேதப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக அப்பிள்ளைகளுக்கு பாடசாலை என்ற ஒரு போர்வையில் தோட்டங்கள் தோறும் ஒரு பிள்ளை பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி அதனூடாக பிள்ளை பெற்றோர்கள் வரும் வரை வைத்திருந்தனர். இன்றுவரையும் இந்த முறைமை தோட்டங்களில் பாணப்படுவதைக் காணலாம். பிள்ளை பராமரிக்கும் நிலையங்களில் பிள்ளைகளை விட்டு விட்டு வேலைக்குச் செல்லுகின்ற நிலமையை குறிப்பிடலாம்.

தோட்டப் பாடசாலைகளில் தோட்டத்தில் காரியாலயத்தில் வேலை செய்த குமாஸ்தா ஒருவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஒரு ஆசிரியர் என்ற முறையே காணப்பட்டது. இலங்கை முழுவதும் ஆங்கிலேயரினால் மிசனரி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும். மலையகப் பிரதேசங்களில் அல்லது தோட்டங்களில் உள்ள தோட்ப்புற பிள்ளைகளுக்காக கல்வக் கற்பதற்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தோட்டப் புற பிள்ளைகள் தோட்டங்களில் உள்ள பாடசாலைகளிலேயே படிக்க வேண்டிய ஒரு துர்ப்பார்க்கிய நிலை காணப்பட்டது.

நகரப் பாடசாலைகளில் கூட இம்மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியாத அல்லது சேர்க்க முடியாத நிலை இருந்திருக்கின்றது என்பது வேதனையான விடயமாகும். அதே வேளை தோட்டத்தில் காரியாலயங்களில் வேலை செய்தவர்களின் பிள்ளைகளும், பெரிய கங்கானிமார்களின் பிள்ளைகளும் நகர பாடசாலைகளில் கல்வி கற்றனர்
பிரிரித்தானியர் காலத்தில் இருந்தே மலையக பிள்ளைகளின் கல்விக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சி. டடபள்யூää டபள்யூ கன்னங்கரா அவர்களால் 1944 ஆம் ஆண்டு இலவச கல்வி முறையானது சகல பிள்ளைகளுக்கும் ஆரம்பிக்கப்பட்டாலும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக உழைத்துக்கொண்டிருக்கின்ற மலையக மக்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்வியை வழங்காது விட்டமையானது பெரும் துரோகமான செயலாகும். மலையக மக்களின் பிள்ளைகளுக்கு 30 வருடங்களின் பின்னரே இலவசக் கல்வி முறையானது கிடைத்து. இந்த 30 வருடக் கல்வி இடைவெளியை இன்று வேகமாக மலையகம் எட்டிப் பிடித்து வருகின்றது. ஆரம்ப கல்வி அடைவ மட்டத்தை அல்லது இலக்கை மலையகம் ஓரளவு பூர்த்தி செய்துள்ளது. இடைநிலைக் கல்வியும்ää உயர்கல்வியும்ää பட்ட மேற் கல்வியும் இன்னும் உரிய இலக்கை அடைவதற்கு முயற்சி செய்து கொண்டு வருகின்றதை காணலாம். இன்னும் சில வருடங்களில் இந்த இலக்கை எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

மலையகம் இன்று கல்வி நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதில் பல சவால்களும், பிரச்சினைகளம், இடையூர்களும்ää காணப்படுகின்றன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான தமிழ் பாடசாலைகள் காணப்படுகின்றது. துரதிஸ்ட வசமாக ஒரு தேசியப் பாடசாலைக் கூட இல்லை. தேசியப் பாடசாலைகள் என சில பாடசாலைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்று அப்பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக உரிய அந்தஸ்தைப் பெற வில்லை. பெயர் பலகை மட்டுமே காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் வருடத்திற்கு 7000 குழந்தைகள் பிறப்பு வீதம் அதாவது இயறகை பிறப்பு வீதம் காணப்படுகிறது. அதில் 4000 பிள்ளைகள் பாடசாலைக்கு சேர்ந்தால் ஒரு வருடத்திற்கு 55 வகுப்பறைகளாவது அமைக்கப்பட வேண்டும். அதே வேலை ஆசிரியர்கள்ää தளபாடங்கள்ää கற்றல் உபகரணங்கள்ää ஏனைய அடிப்படை வசதிகள் போன்றன உருவாக்கப்பட வேண்டும். ஆனால் வருடாந்தம் பாடசாலைக்கு சேர்ந்து கொள்ளும் விதூசாரம் அதிகரித்தாலும் கூட பாடசாலைகளுககான உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிடங்களில் மாற்றம் இல்லை. ஆசிரியர் தொகையில் பாரிய மாற்றம் இல்லை. இதனால் பாடசாலைகளில் இட நெருக்கடி மற்றும் இன்றி பெற்றோர்கள் விரும்பிய பாடசாலைகளுக்கு தங்களுடையப் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள முடியாத நிலையும் இன்று உருவாகியுள்ளது.

புதிய பாடங்களை படிப்பதற்கான மாணவர்களின் தொகை இருந்தாலும் கூட அப்பிரிவில் படிப்பை தொடர்வதற்கான ஆய்வு கூட வசதிகள், தொழில்நுட்பக்கூட வசதிகள் இல்லை. கணித விஞ்ஞானத் துறைகளுக்கான ஆசிரியர்கள் போதியளவு இல்லை.
மலையகப் பாடசாலைகளில் காணப்படும் பொதுவான பிரச்சினைகளை நோக்கிளால். கணித விஞ்ஞான, ஆங்கிலப் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை, க.பொ.த உயர் தரப் பிரிவிலே கணித, விஞ்ஞான, தொழி;ல் நுட்ப பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறைää குறிப்பாக உயிரியல் தொழில் நுட்பம், பொறியில் தொழில் நுட்பம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை. வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களின் பற்றாக்குறைää விசேட தேவையுடையப் பிள்ளைகளுக்கான ஆசிரியர் பற்றாககுஐறää விளையாட்டுத் துறைக்கான ஆசிரியர் பற்றாக்குறை,உயர் தரத்திலே நடனம்,சங்கீதம்,சித்திரம்,  நாடகமும் அரங்கியலும், இரண்டாம் மொழி, தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், சமய ரீதியான பாடங்களுக்குத் தேவையான பட்டதாரி ஆசிரியர்கள், அதே போல் மனைப் பொருளியலுக்கு, விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பட்டதாரி அசிரியர்கள் இன்று வரையும் பற்றாக்குறையாகவே இருப்பதை பல பாடசாலைகளில் அவதானிக்கலாம். இதனால் மலையகத்தில் இருக்கின்ற ஒரு சில பாடசாலைகளை நோக்கி மாணவர்கள் படையெடுப்பதை அவதானிக்கலாம். அத்துடன் மாணவர்கள் தாங்கள் விரும்பியப் பாடத்தை விரும்பியப் பாடசாலையில் தெரிவு செய்ய முடியாத நிலையும் இன்று உருவாகியுள்ளது.

பல பாடசாலைகளில் இன்றும் தளப்பாடப் பற்றாக்குறை நிலவுகின்றது. குறிப்பாக மாணவர் மேசை, கதிரை, ஆசிரியர் மேசை, கதிரை, அலுமாரிகள், வைட் போர்ட், சிமார்ட் போர்ட், மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறைகள் பற்றாக்குறை. இந்த விடயம் எதிர்காலத்தில் பாரிய ஒரு சமூகப் பிரச்சினையாக உருவாக இருப்பதை அவதானிக்கலாம். விளையாட்டு மைதானம் இல்லை. விளையாட்டு உபகரணங்கள் கிடைப்பது மிக மிக குறைவு. கட்டிட வசதிகள் இல்லை.

பழைய கட்டிடங்களில் இன்றும் வகுப்பறைகள் இயங்குவதைக் காணலாம். இடப் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் பல பாடசாலைகளில் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதை அவதானிக்கலாம். விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள், தொழில் நுட்பத் துறைக்கான ஆய்வு கூடங்கள்,மனைப் பொருளியல், விவசாய விஞ்ஞானத்திற்கான, ஆங்கிலப் பாடத்திற்கான செயற்பாட்டு அறைகள், லையரங்கம், போன்ற பல விடயங்களை காணாமலே மலையக மாணவர்கள் படிக்கின்றார்கள். மின்சார வசதிகள் இல்லை. இன்டர்நெட் வசதி, சீர் வசதி, மலசல கூட வசதி, ஆசிரியர், மாணவர்களுக்கு போதியதாக இல்லை. பாடசாலைகளில் சிற்றூழியர்கள், ஆய்வு கூட உதவியாளர், வாசிகசாலை உதவியாளர், காரியாலய முகாமைத்துவ உதவியாளர், பாடசாலைகளுக்கான காவலாளி,  சிற்றுண்டிச்சாலை வசதி என்பன இன்று வரையும் பல பாடசாலைகளுக்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டியவர்கள் கவனிப்பார்களா? மலையகச் சமூகம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு பாடசாலை முறைமையில் உள்ள மனித வளம்ää பௌதிக வளம் என்ற இரண்டையும் முடிந்தளவு தீர்ப்பதன் மூலமே சாத்தியப்பாடாக மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்து.

பூரணமான மாணவர்களையோ, பூரணமான பாடசாலையோ மலையகத்தில் காண முடியாது. மலையகத்தில் இருக்கின்ற ஓரிரு பாடசாலைகளை வைத்துக் கொண்டு மலையகப் பாடசாலைகளையோ,  மலையகத்தின் கல்வி நிலையையோ தீர்மானித்து விட முடியாது என்பது குறிப்பிடத்தக்து.

CATEGORIES
Share This