காமினி- மஹிந்த-வாசு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி 54 வருடங்கள்; அரசியலில் முக்கிய புள்ளிகளாகவும் இடம்பிடிப்பு

காமினி- மஹிந்த-வாசு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி 54 வருடங்கள்; அரசியலில் முக்கிய புள்ளிகளாகவும் இடம்பிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு நேற்றுடன் (27) 54 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1970 மே 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக அவர்கள் மூவரும் நாடாளுமன்ற ஆணைகளைப் பெற்றனர்.

சுதந்திரக் கட்சியின் பெலியத்த ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ 6626 மேலதிக வாக்குகளாலும் வாசுதேவ நாணயக்கார ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சியின் கிரியெல்ல ஆசனத்திலும் 6180 மேலதிக வாக்குகளாலும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் நுவரெலியா தொகுதியில் 2077 வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக காமினி திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This