அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம்

அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம்

யார் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. தற்போது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற நெடுந்தீவு குமுதினி படுகொலை நினைவேந்தலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் வவுனியாவில் சிவில் அமைப்புகள் மதத்தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கலந்துரையாடி பொது வேட்பாளர் தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதுடன் தமிழர்களுடைய அபிலாசைகளை உலகுக்கு வெளிக்காட்டும் விதத்திலும் தமிழர் வாக்கு தமிழருக்கே என்ற அடிப்படையிலும்தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு உரிமை சார்ந்த தீர்வை வழங்காது என்பதே கடந்த கால வரலாறு எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This