திருமலையில் கஞ்சி பரிமாறியதற்காக பெண்கள் தாக்கப்பட்டமை குறித்து மக்கள் பேரவைக்கான இயக்கம் கடும் கண்டனம்
திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்த பெண்களை நள்ளிரவில் வீடு புகுந்து பொலிஸார் கைதுசெய்ததை மிக மோசமாக செயற்பட்டதை கடுமையாக கண்டித்துள்ள மக்கள் பேரவைக்கான இயக்கம் துக்கதினத்தை கூட அனுஸ்டிக்கும் உரிமை இலங்கையில் தமிழர்களிற்கு இல்லை என தெரிவித்துள்ளது
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்தார்
அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் மூன்று தசாப்தபோர் மிகவும் மோசமான முறையில் இலங்கை அரசாங்கத்தினால் முடித்துவைக்கப்பட்டது.
தமிழ்மக்கள் தங்கள் நாட்டின் பிரஜைகள் என்ற கரிசனையில்லாமல் குண்டு வீசி கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர்.
சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டனர்..
இவர்களை நினைகூரும்வகையில் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
உணவு இல்லாததால் உணவு கிடைக்காததால் தண்ணீர் கலந்த அரிசியை கஞ்சியை குடித்து உயிர்வாழ்ந்தனர்.
அதனை நினைகூரும் வகையிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகின்றது.
அந்த மக்கள் 15 வருடங்கள் கடந்த பின்னரும் எந்த நீதியையும் பெறாமல் வாழ்கின்றனர் அரசாங்கம் அவர்களிற்கு எந்த ஒரு நீதியையும் வழங்கவில்லை எந்தவொரு முடிவையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மிகமோசமான சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
திருகோணமலைசம்பூரில் பெண்கள்தாங்களாக முன்வந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது வடகிழக்கில் வழமையாக இடம்பெறும் விடயம்தான் அரசாங்கத்திற்கும் இது தெரியும்.
ஆனால் பொலிஸார் மிகமோசமாக நடந்துகொண்டுள்ளனர்.
இது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் நினைவுகூரலின் போது உணவு வழங்குவது பானங்களை வழங்குவதுஅடிப்படை உரிமையாகும்.
வெசாக் தன்சலிற்கு இவ்வாறான தடைஉத்தரவை பிறப்பிப்பார்களா?
அப்பாவி பொதுமக்களை பொலிஸார் மிக மோசமான முறையில் நடத்தியுள்ளனர்.
இரவுவேளை வீட்டிற்குள் நுழைந்துஅடித்து உதைத்து காடையர்கள் போல செயற்பட்டுள்ளனர்
இவர்கள் பொலிஸாரா ஒரு துக்கதினத்தை கூட அனுஸ்டிக்க முடியாத நிலையில் இந்த நாட்டில்தமிழன் நிலை காணப்படுகின்றது.
இதனைநாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் வாரத்தில் நினைவுரல் நிகழ்வுகள் நாடு முழுவதிலும் சுமூகமான முறையில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.என தெரிவித்துள்ளார்.