ஜனாதிபதி தேர்தலை நடத்த எளிதான நாள் எது?; விளக்கமளிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதி தேர்தலை நடத்த எளிதான நாள் எது?; விளக்கமளிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு, சுமார் ஒரு வார கால அவகாசம் எடுத்துக் கொள்வதில் சிக்கல்கள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமான ”நெத் நியூஸ்” செய்தி சேவைக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் ஜூலை மாதம் 24, 25 அல்லது அதனை அண்மித்த திகதிகளில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்த எளிதான நாள் எது என்பது தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

”ஜூலை மாதம் 17ஆம் திகதி தொடக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது. காரணம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி போயா தினம் ஆகும்.

அதனடிப்படையில், செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் தேர்தலை நடத்த முடியும், எவ்வாறாயினும், செப்டம்பர் 20ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவகாசம் உள்ளது.” என தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This