திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருகோணமலை மூதூர் பிரதேசத்துக்குட்பட்ட சீனன்வெளி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தலைமையில் இடம்பெற்ற இந்நினைவேந்தலின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களின் ஆத்மாக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து, உப்புக்கஞ்சி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.