அதிகாரம் மக்களின் கரங்களிலேயே நீடித்திருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள்

அதிகாரம் மக்களின் கரங்களிலேயே நீடித்திருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள்

ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் அதிகாரம் மக்களின் கரங்களிலேயே இருப்பதை உறுதி செய்பவர்கள் பத்திரிகையாளர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

உண்மையை துணிச்சலுடன் பின்பற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றும் இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர்களிற்கு நாங்கள் என்றும் ஆதரவாக இருக்கின்றோம்.

ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேணுவதிலும் பொதுமக்களிற்கு விடயங்களை தெரியப்படுத்துவதிலும் பத்திரிகையாளர்கள் இன்றியமையாத பங்கை வகிக்கின்றனர்.

அவர்கள் பொது நிறுவனங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வணிகங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழலை வெளிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைதன்மைக்காக குரல் கொடுப்பதன் மூலம் விமர்சனத்துடனான ஆய்வுகளை முன்வைப்பதன் மூலம் பத்திரிகையாளர்கள் அதிகாரம் மக்கள் நீடித்திருப்பதை உறுதி செய்கின்றனர்.

CATEGORIES
Share This