ஜே.வி.பி. கட்சி அசுர வளர்ச்சி; சீனா புகழாரம்
தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது என்று சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார பணிமனை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சீன கம்யூனிசக் கட்சியின் சர்வதேச விவகார பணிமனையின் தூதுக்குழு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தபோது இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடினர்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் தூதுக்குழுவிற்கு விளக்கினர்.
இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஹரினி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான சுனில் ஹதுன்நெத்தி மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.