மாநிலங்களவை எம்பி பதவிக்கு சோனியா காந்தி வேட்புமனு!
ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தற்போது உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜெய்பூரில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தியும், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வரும் பெப்ரவரி . 27ஆம் திகதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை (15) கடைசி நாளாகும்.