அன்னை பூபதியின் 36 ஆவது நினைவு தினம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

அன்னை பூபதியின் 36 ஆவது நினைவு தினம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை(19) தமிழரசு கட்சி ஏற்பாட்டில் கிளிநொச்சி பொது சேவை சந்தை முன்பாக அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் இந்தியா அமைதிப்படைகள் இலங்கையில் குறிப்பாக வடக்கு-கிழக்கு பகுதிகளுக்குள் முகாம் அமைத்து வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு அமைதி என்ற போர்வையிலே அட்டூழியங்களையும் செய்து வந்த காலகட்டத்தில் அன்னை பூபதி சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தால் விடுதலை பெற்ற பாரத நாடு என்ற வரலாறு கூறப்படும் இந்திய நாடு குறித்த அன்னை பூபதியின் போராட்டத்தை கணக்கில் எடுக்கவில்லை.

போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னமே இந்திய படை அதிகாரிகளுடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்போது அன்னை பூபதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, தான் இந்த போராட்டத்தில் நோய்வாய்ப்பட்டாலோ சோர்ந்து போனாலோ எனது கணவனோ அல்லது பிள்ளைகளோ என்னை மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது என்றார். அன்னை பூபதி தனது 56 வயதில் தன் தாய் தேசத்துக்காக தன்னுயிரை மாய்த்து அன்னை பூபதி ஒரு வரலாற்று காவியமானார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

CATEGORIES
Share This