மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு
இந்தியாவில் மக்களவை தேர்தல் இன்று தொடங்கி எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதிவரை நடைபெறுகிறது. ஜுன் 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 67.52 சதவீத வாக்குகளும், பதிவாகியுள்ளன. தென் சென்னையில் குறைந்தபட்சமாக 57.04 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியான வாக்குப்பதிவு – மாலை 5 மணி நிலவரம்:
தருமபுரி – 67.52%
நாமக்கல்- 67.37%
ஆரணி – 67.34%
கள்ளக்குறிச்சி – 67.24%
கரூர்- 66.91%
சிதம்பரம் – 66.64%
பெரம்பலூர் – 66.56%
திருவண்ணாமலை – 65.91%
சேலம்- 65.86%
அரக்கோணம் – 65.61%
வேலூர் – 65.12%
விழுப்புரம்- 64.83%
கிருஷ்ணகிரி – 64.65%
ஈரோடு – 64.50%
திண்டுக்கல் -64.34%
நாகப்பட்டினம் – 64.21%
கடலூர் – 64.10%
நீலகிரி – 63.88%
விருதுநகர் – 63.85%
மயிலாடுதுறை – 63.77%
பொள்ளாச்சி -63.53%
தேனி – 63.41%
தென்காசி – 63.10%
தூத்துக்குடி – 63.03%
ராமநாதபுரம் -63.02%
தஞ்சாவூர்- 63.00%
கன்னியாகுமரி – 62.82%
சிவகங்கை – 62.50%
திருச்சி – 62.30%
காஞ்சிபுரம் – 61.74%
திருவள்ளூர் – 61.59%
கோவை – 61.45%
திருப்பூர் – 61.43%
திருநெல்வேலி – 61.29%
மதுரை – 60.00%
ஸ்ரீபெரும்புதூர் – 59.82%
வட சென்னை -59.16%
மத்திய சென்னை – 57.25%
தென் சென்னை – 57.04%
ஆளுநர் ரவி மகிழ்ச்சி, “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18ஆவது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம்6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.