தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்காக 32.4 மில்லியன் ஒதுக்கீடு

தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்காக 32.4 மில்லியன் ஒதுக்கீடு

தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 32.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களில் பொதுமக்கள் வழங்கிய முன்னுரிமை அடிப்படையிலான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியை ஒன்றிணைத்து இம்முறை பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரம் தேசிய திட்டமிடல்பணிமனையினால் 61 வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
Share This