ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 80 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!
ஹோட்டல் ஒன்றில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட வாடிக்கையாளர்களில் 80 பேர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம், தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் காப்பர்பெல்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு 80 பேர் நிலைகுலைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஷவர்மா சாப்பிட்டவர்களின் உணவில் விஷம் கலந்திருந்ததால் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நோயாளிகள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுபோக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு வைத்தியர்கள் சிசிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதனையடுத்து முறைப்பாட்டின் பேரில் ஷவர்மா விற்ற ஹோட்டல் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
CATEGORIES உலகம்