உலக சமூக நீதிக்கான தினம்!

உலக சமூக நீதிக்கான தினம்!

1995ல் ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் சமூக வளர்ச்சிக்கான உச்சி மாநாடு (Summit for Social Development) நடைபெற்றது.

இந்த உச்சி மாநாட்டின் முடிவில் “கோபன்ஹேகன் பிரகடனம்” (Copenhagen Declaration) மற்றும் செயல் திட்டம் (Programme of Action) உருவானது. இது வறுமை, வேலையின்மை மற்றும் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்தது.

பிறகு 2007ல், “உலக சமூக நீதிக்கான தினம்” (World Day of Social Justice) முதன்முதலில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அறிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் பிப்ரவரி 20 அன்று “உலக சமூக நீதிக்கான தினம்” அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாள், சமூக நீதியை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் அவர்களின் விருப்பம் போல் லட்சியங்களை அடைய வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த தினம், சமூக நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அலசவும், எஞ்சியிருக்கும் சவால்களை அடையாளம் காணவும், சமூக அமைதியை நிலைநாட்ட தேவைப்படும் கூட்டு முயற்சிகள் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கும் சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவருக்கும் ஒரு வாய்ப்பாகும்.

2024 வருடத்திற்கான உலக சமூக நீதி தின கருப்பொருள் (theme) “இடைவெளிகளை நிரப்புதல், கூட்டணிகளை உருவாக்குதல்” (Bridging Gaps, Building Alliances) என்பதாகும்.” உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.

சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும், பாகுபாடுகளையும், சமத்துவமின்மையையும் எதிர்த்து போராடவும் இந்த நாளில் நாம் உறுதியேற்போம்.

அனைவருக்கும் நியாயமான உலகத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும்.

CATEGORIES
TAGS
Share This