பிலிப்பைன்சில் டிராமி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிலிப்பைன்சில் டிராமி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்சின் இசபெலா (Isabela), இபுகாவோ( Ifugao )உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமற் போயுள்ளனர் எனவும், இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This