எரிமலை வெடிப்பு – ஐஸ்லாந்தில் அவசரகால நிலை!

எரிமலை வெடிப்பு – ஐஸ்லாந்தில் அவசரகால நிலை!

எரிமலை வெடிப்பு காரணமாக, ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக மக்களுக்கு சுடு நீரை விநியோகிக்கும் பல குழாய்கள் சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொதுமக்கள் சுடுநீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர், ஐஸ்லாந்தில் மூன்றாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், சுடுநீர் கிடைக்காத பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலை நீடிக்குமாயின் 30,000 இற்கும் அதிகமானவர்கள் சுடுநீர் இன்றி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் உடனடியான மனிதாபிமான உதவிகள் ஐஸ்லாந்துக்கு தேவைப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

CATEGORIES
TAGS
Share This