சிறப்புச் சலுகை கிடையாது- கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி!

சிறப்புச் சலுகை கிடையாது- கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி!

முதலமைச்சராக இருப்பதற்காகவெல்லாம் எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கைது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் தலையிட முடியாது என மறுத்துவிட்டது. மேலும், தேர்தல் நேரத்தை கணக்கிட்டு அமலாக்கத்துறை தன்னை கைது செய்துள்ளது என்ற கெஜ்ரிவாலின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், கைது செய்யப்பட்டதில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் பிரச்னைகளை நீதிமன்றத்தின் முன்பு கொண்டு வர முடியாது என கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், முதலமைச்சர் என்ற காரணத்தால் கெஜ்ரிவாலுக்கு எந்த ஒரு சிறப்புச் சலுகையும் வழங்க முடியாது என்றும் கூறியுள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம் கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This