தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை!

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்காலத் தடை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை எதிர்வரும் 19 ஆம் திகதி நடத்துவதற்குத் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை தற்போது நடந்து வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This