கிராம உத்தியோகத்தர் பெறுபேறுகள் வெளியாகின!
வெற்றிடமாக காணப்பட்ட 2,002 கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கிராம உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்காக கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சைக்கு அமைய 4 ஆயிரத்து 232 பேர் நேர்முகத்தேர்வுக்கு தகுதிபெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நேர்முகத்தேர்வுக்கு தகுதிபெற்றவர்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
CATEGORIES Uncategorized