கோடை காலத்திற்கு உகந்த பழச்சாறு!

கோடை காலத்திற்கு உகந்த பழச்சாறு!

கோடை காலத்திற்கு ஏற்ப என்னென்ன பழச்சாறுகள் அருந்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

கோடை காலம் வந்துவிட்டாலே உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடுவதுடன், உடல்நிலையும் பாதிக்கப்படுகின்றது. இந்நிலையில் பழச்சாறு உடம்பிற்கு ஆரோக்கியததையும், நீர்ச்சத்து குறையாமலும் பார்த்தக் கொள்கின்றது.

கோடைகாலத்திற்கு ஏற்ற பழச்சாறு
வைட்டமின் A மற்றும் C, பொட்டாசியம் சத்துக்களையும், 92 சதவீதம் நீர்ச்சத்தையும் கொடுக்கும் தண்ணீர் பழத்தினை ஜுஸாக குடிக்கலாம்.

முலாம் பழம் மற்றும் திராட்சை பழத்திலும், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கோடை காலத்திற்கு சிறந்ததாக இருக்கின்றது.

இதே போன்று வைட்டமின் சி சத்துக்களை கொண்ட நெல்லிக்காய், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்திலும் ஜுஸ் போட்டு குடிக்கலாம்.

கொய்யா பழம் மற்றும் பலாப்பழம் இவற்றினை வெயில் காலங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

CATEGORIES
TAGS
Share This