எடை குறைப்புக்கு உதவும் சுரைக்காய் தோசை!

எடை குறைப்புக்கு உதவும் சுரைக்காய் தோசை!

ஊட்டச்சத்து நிபுணர்கள் தோசைகளை அளவுக்கேற்ப சாப்பிட்டால் அது உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை குணப்படுத்தவும் உதவுகிறது என்று நம்புகிறார்கள்.

அன்றாட தோசையில், ஒரு பகுதி உளுத்தம்பருப்புடன் மூன்று பங்கு அரிசியை சாப்பிடப் பழகிவிட்டோம். இது குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது என்கிறார்கள்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்யும் ஒரு பொதுவான தவறு என்னவென்றால் “கலோரி பற்றாக்குறையை அடைவது” அதாவது உடலுக்குத் தேவையானதை விட குறைவாக சாப்பிடுவது என்று நிபுணர் குறிப்பிட்டார்.

ஆனால் அதற்கு பதிலாக நாம் செய்ய வேண்டியது, சத்தான உணவைத் தேடுவதுதான். அதாவது சாதாரண தோசைக்கு பதிலாக சுரைக்காய் மற்றும் பாசி பருப்பு தோசையை தயாரித்து சாப்பிடலாம்.

இதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அளவு புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும்.

சாம்பார் அல்லது பருப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சுரைக்காய்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது.

காய்ச்சல், இருமல், வலி மற்றும் ஆஸ்துமா போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு இந்த காய்கறி பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இது வைட்டமின் பி, சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாகவும் கருதப்படுகிறது.

தேவையான பொருட்கள்,

பாசி பருப்பு – 1 கப்

அரிசி – 1 டீஸ்பூன்

சுரைக்காய்

கொத்தமல்லி இலைகள்

இஞ்சி

பச்சை மிளகாய்

எண்ணெய்

உப்பு – தேவையான அளவு

செய்முறை,

1 கப் பருப்பு மற்றும் 1 டீஸ்பூன் அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

பருப்பு மற்றும் அரிசி நன்கு உறியவுடன் தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதில் துண்டுகளாக நறுக்கிய சுரைக்காய், கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் தவா ஒன்றை வைத்து அது சூடானதும் எண்ணெய் தேய்த்து கொள்ளவும்.

பிறகு ஒரு கரண்டியில் தேவையான அளவு மாவை எடுத்து தோசை ஊற்றி கொள்ளவும்.

ஒரு பக்கம் தோசை வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைத்து கொள்ளவும்.

இருபக்கமும் தோசை வெந்தவுடன் எடுத்து சூடாக சாப்பிடுங்கள்.

அவ்வளவுதான் உங்கள் உடல் எடை இழப்பு பயணத்திற்கு ஏற்ற சுரைக்காய் தோசை தயார்.

CATEGORIES
TAGS
Share This