முதலாவது ஜனாதிபதி தேர்தலே, அதில் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் – பசிலிடம் ரணில் தெரிவிப்பு!

முதலாவது ஜனாதிபதி தேர்தலே, அதில் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் – பசிலிடம் ரணில் தெரிவிப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் சந்தித்து எதிர்வரும் தேர்தல் திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

முதலில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பது இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும் தம்மையே தனது கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்துவதாகவும் ஜனாதிபதி நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் வேட்பாளர் தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கட்சியின் அரசியல் மற்றும் நாட்டைப் பற்றி சிந்தித்தால் முதலில் , பொதுத் தேர்தலைத்தான் நடத்த வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், மக்கள் ஜனாதிபதித் தேர்தலையே கோருவதாகவும், வீழ்ந்த நாட்டை நானே நிமிர்த்தினேன், எனவே மக்கள் என்னை புறக்கணிப்பார்கள் என நினைக்கவில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This