மணிப்பூரில் 4ஆவது முறையாக இராணுவ அதிகாரி கடத்தல்!

மணிப்பூரில் 4ஆவது முறையாக இராணுவ அதிகாரி கடத்தல்!

மணிப்பூரில் கடந்தாண்டு மேமாதம் இனக் கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காண, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தவுபல் மாவட்டத்தைச் சேர்ந்த கொன்சம் கேடா சிங் எனும் ஜூனியர் இராணுவ அதிகாரியை, அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று காலை கடத்திச் சென்றனர். அவரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர் எதற்காக கடத்தப்பட்டார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

மணிப்பூரில் பணிக்கு வரும் அல்லது விடுமுறையில் வரும் வீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கடத்தி செல்லப்படுவது கடந்த ஆண்டு மே மாதம் முதல் 4 முறை நடைபெற்றுள்ளது. இராணுவத்தினரை கடத்தி செல்லும் சம்பவம் தொடர்ந்தால், மணிப்பூரில் மீண்டும் இராணுவ சிறப்பு அதிகார சட்டம் அமலாகும் சூழல் ஏற்படும் என மணிப்பூர் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This