இன்றைய ராசிபலன் – 09.03.2024

இன்றைய ராசிபலன் – 09.03.2024

பொதுப்பலன்: வியாபாரம் தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, சித்தர் பீடம் மற்றும் முருகப் பெருமானை வழிபட, மருந்துண்ண, வளர்ப்பு பிராணிகள் வாங்க, மூலிகை குளியல் செய்ய நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், தடைகள் விலகும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் மன அமைதி பெறலாம். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் மனம் செல்லும்.

ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பயணங்கள் திருப்தி தரும்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் அநாவசிய பேச்சுக்களை தவிர்க்கப் பாருங்கள். வாகனம் செலவு வைக்கும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். வழக்குகள் தாமதமாகும்.

சிம்மம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழப்பம் தீர்ந்து குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சோர்வு நீங்கும்.

கன்னி: திடீர் பண வரவால், கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.

துலாம்: பழைய நண்பர்கள் மூலம் உதவியுண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் சாதனைகளால் அந்தஸ்து உயரும். பழைய பாக்கிகள் வந்தடையும்.

விருச்சிகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் வரும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

மகரம்: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர். அலுவலகத்தில் பிரச்சினை தீர்ந்து நிம்மதி உண்டு.

கும்பம்: உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

மீனம்: பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பங்குதாரர்களின் உதவியுடன் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This