பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

பெண்களுக்கும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ ஒன்று அதன் அருகில் நின்று கொண்டிருந்த பெண் நிருபரிடம் அத்துமீறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில், முஹம்மது என்னும் உலகின் ஆண் ரோபோ ஒன்றினை நேரலையில் காண்பிப்பதற்காக பெண் நிருபர் ஒருவர் அதன் அருகில் நின்றுகொண்டிருந்தபோது குறித்த ரோபோவானது பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளது.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

மார்ச் 8 ஆம் திகதியான இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் சூழல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும் இதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தநிலையில் மனிதர்களின் செயல்களால்தான் இது நிகழ்கிறது என்றால், மற்றொரு புறம் உயிரற்ற ரோபோக்கள் கூட இதனை விட்டு வைக்கவில்லை என்பது பெரும் கேள்வியினை உருவாக்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This