இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை – நாளை பிரதமர் தொடக்கி வைக்கின்றார்!

இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை – நாளை பிரதமர் தொடக்கி வைக்கின்றார்!

கொல்கத்தா மெட்ரோ கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியானஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகி உள்ளது.

இந்த மெட்ரோ ரயில் வழித்தடபாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் செல்கிறது. ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ ரெயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.ஹவுரா மெட்ரோ நிலையம் இந்தியாவின் ஆழமான மெட்ரோ நிலையம் ஆகும்.

இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியதும் அங்கு சாலை போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கொல்கத்தா மெட்ரோ ரெயில் பொது மேலாளர் உதய்குமார் ரெட்டி கூறியதாவது:-

கொல்கத்தா ஹூக்ளி ஆற்றில் தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் 7 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள்.

ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பாதை நாட்டின் ஆற்றின் அடியில் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து சுரங்கப்பாதை ஆகும்.ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தட பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.45 வினாடிகளில் இந்த பாதையை மெட்ரோ ரயில் கடந்து செல்லும்.

CATEGORIES
TAGS
Share This