இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் தேர்தல் – அமித் ஷா

இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் தேர்தல் – அமித் ஷா

எதிர்வரும் மக்களவைத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

மும்பையில் நடைபெற்ற இந்தியா குளோபல் ஃபோரம் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, இந்த தேர்தல் ஜனநாயகம், பாதுகாப்பு, ஏழைகளின் நலன், பொதுமகக்கள் நலன், பரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கொண்டாட்டமாக அமையப் போகிறது.

2047-ஆம் ஆண்டில், நாடு விடுதலையடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் போது, உலக அரங்கில் இந்தியா எங்கே நிற்கப் போகிறது என்பதை அடுத்த ஐந்தாண்டுகளில் எடுக்கப்போகும் முடிவுகள் தான் தீர்மானிக்கும். ஆகவே, எதிர்வரும் மக்களவைத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பு அடைந்த நிலைமையை நோக்கி முன்னேறி வருகிறது. இப்போது இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக மாற பயணிக்கிறது.

பிரதமர் மோடியால் நிர்ணயிக்கப்பட்டஇலக்குகளான ’முழு வளர்ச்சியடைந்த தற்சார்பு அடைந்த இந்தியா மற்றும் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா’ ஆகியவை நிச்சயமாக எட்டப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த இலக்குகளை அடைய, கடந்த பத்தாண்டு கால செயல்பாட்டுடன், அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமும் எங்களிடம் இருப்பதாக அமித் ஷா கூறினார்.

CATEGORIES
TAGS
Share This