இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்!

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்!

முதல் AI (Artificial Intelligence – AI) ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான நடவடிக்கையை கேரளா எடுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள KTCT உயர் நிலைப் பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரிஸ், மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட மனித உருவம் ஆகும்.

ஐரிஸ் கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிக்காட்டுகிறது.

மூன்று மொழிகளைப் பேசும் திறன் மற்றும் சிக்கலான கேள்விகளைச் சமாளிக்கும் திறனுடன், ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணத்தை ஐரிஸ் வழங்குகிறது.

மேக்கர்லேப்ஸ் எடுடெக் (Makerlabs Edutech) பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஐரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் AI ஆசிரியர் ரோபோ இது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This