சாந்தனின் மரணத்திற்கு இந்திய, இலங்கை அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்!

சாந்தனின் மரணத்திற்கு இந்திய, இலங்கை அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்!

சாந்தனின் மரணத்திற்கு இந்திய, இலங்கை அரசுகளும் தமிழ் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கைது செய்யப்படும் இந்திய கடற்தொழிலாளர்களை நல்லிணக்க அடிப்படையில் ஒரே இரவில் பேச்சுவார்தை மூலம் விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் சாந்தனை உடன் விடுதலை செய்ய முடியாமல் போனது என மு.கோமகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு இலங்கையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This