திருப்பூர் பல்லடம் நிகழ்ச்சியில் பரபரப்பு – பிரதமர் மோடி மீது செல்போன் வீச்சு!
பல்லடம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி மீது செல்போன் வீசப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நேற்று பல்லடத்தில் நிறைவு பெற்றது.
234 தொகுதிகளையும் சுற்றி, பல்லடத்தில் முற்று பெற்ற இந்த நிகழ்வில் நாட்டின் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் பல்லட்டத்திற்கு வந்த பிரதமர், திறந்தவெளி வாகனத்தில் மக்களை நோக்கி கையசைத்து படி வந்தார். அவருடன் வாகனத்தில் அண்ணாமலை, மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் இருந்தனர்.
பொதுமக்கள் பிரதமர் மோடி மீது பூக்களை வீசியும், பாரத் மாதா கீ ஜெய் என கோஷம் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சமயத்தில் திடீரென, கூட்டத்தில் இருந்து பிரதமரின் வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் வெளியாகியுள்ளது.