கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்!
கண்டி குடிவரவு குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெற வந்தவர்களுக்கு மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தூர இடங்களில் இருந்து வந்து கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பல நாட்களாக காத்திருந்த ஒரு குழுவிற்கும் இன்று காலை அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வரிசையில் நின்று கடவுச்சீட்டு பெற வரும் நபர்களிடம், திட்டமிட்ட கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பணம் பறிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு கண்டியில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவதாக அங்கு வந்திருந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆயிரத்தெட்டு இன்னல்களுக்கு மத்தியில் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து நாட்டிற்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் இந்த மக்களுக்கு குறைந்தபட்ச சேவையையேனும் வழங்க குடிவரவு அதிகாரிகள் கண் திறப்பார்களா?