நாட்டில் 30 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்!
புத்தாண்டு காலத்தில் இனிப்புகளை உட்கொள்ளும் போது சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் 30 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர்நல வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சிறுவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்கும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அவ்வாறான நோய்தொற்று காணப்படுமிடத்து அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர்நல வைத்தியர் தீபால் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.