தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

அதிவேக நெடுஞ்சாலையின் பணியாளர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த பணியாளர்கள் மீது தொடங்கொடவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This