மட்டக்களப்பு நாவலடியில் விபத்து : மனைவி பலி ; கணவர் காயம்!

மட்டக்களப்பு நாவலடியில் விபத்து : மனைவி பலி ; கணவர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று (03) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் தனது மகளை பார்த்துவிட்டு, வெலிகந்த, குடாபொகுன பிரதேசத்திலுள்ள தமது வீட்டுக்கு கணவனும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோதே விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே நாய் பாய்ந்தமையே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மனைவி உயிரிழந்துள்ளார்.

அப்துல் ஹமீத் ஜமீலா என்கிற 53 வயது பெண்ணே விபத்தில் உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில், 56 வயதுடைய பெண்ணின் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

CATEGORIES
TAGS
Share This