இஸ்ரேல் – காசா போரில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படும் – ஜோ பைடன்

இஸ்ரேல் – காசா போரில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படும் – ஜோ பைடன்

இஸ்ரேல் – காசா போரில் அடுத்த திங்கட்கிழமைக்குள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தாம் நெருக்கமாக பணியாற்றி வருவதாக, தமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த வருடம் ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலில் தாக்குதலை நடத்தியதை அடுத்து அங்கு 1,200க்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து இஸ்ரேல் காசாவில் தொடர்ச்சியாக பதில் தாக்குதலை நடத்தி வருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 90 பேர் காசாவில் கொல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை 29,782 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This