கிழக்கு பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

கிழக்கு பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

கிழக்கு பல்கலை மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (09) பிற்பகல் 4.30 மணியளவில் கொம்மாதுரை பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் பேரணியாக வந்த மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் போது தற்போது வழங்கும் மகாபொல கொடுப்பணவை அதிகதிரிக்க வேண்டும், புதியதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 6 மாதமாக மகாபொல வழங்கப்படவில்லை, மாணவர்கள் தங்கும் விடுதியில் மருத்துவ வசதி இல்லை , நிரந்தர வைத்தியர் வேண்டும், இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதி இல்லை, விரைவில் வழங்குவதாக கோரியும் விடுதி வழங்க இழுத்தடிப்பு செய்கின்றமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This