பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

கடந்த சில நாட்களாக பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு எதிராக சிலரின் தூண்டுதலில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை (03) பெற்றோர்கள் வலயக் கல்விப் மணிமனைக்கு முன்யு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் நேர்மையான வலயக் கல்விப் பணிப்பாளர் எங்களுக்கு தொடர்ச்சியாக வேண்டும்,  கிராமப்புற பாடசாலைகளை வாழவைக்க வந்த வலயக் கல்விப் பணிப்பாளரை வேலை செய்ய விடு, கெளரவ ஆளுநரே எமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை காட்டும் வலயக் கல்விப் பணிப்பாளரை வேலை செய்ய விடு,  வலயக் கல்விப் பணிப்பாளரை சுயமாக இயங்கவிடு போன்ற பதாதைகளை தாங்கியவாறு வலயக் கல்வி அலுவலகம் முன்பு இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் வலயத்துக்கு வருகை தந்திருந்த மாகாண கல்வி அதிகாரிகளை சந்தித்து தங்களது மகஜரை கையளித்தனர்.

CATEGORIES
TAGS
Share This