கடற்தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் கோரிக்கை!
இந்தியா – இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடற்தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு கடற்தொழிலாளர்களின் நலன்சார்ந்து மனிதாபிமான முறையில் கடற்தொழிலாளர் பிரச்சினையை அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வட மாகாணத்தில் இந்தியாவினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.