நோய்களுக்கான 46 மருந்துகள் தரமற்றவை : மத்திய அரசு

நோய்களுக்கான 46 மருந்துகள் தரமற்றவை : மத்திய அரசு

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வில் போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் 932 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளி பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், கிருமித்தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பான விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This