டிராக்டர் கவிழ்ந்து விபத்து ; 8 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!

டிராக்டர் கவிழ்ந்து விபத்து ; 8 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று பவுர்ணமி என்பதால் கங்கையில் நீராட அவர்கள் சென்றனர். டிராக்டரின் டிராலியில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் பயணம் செய்தனர்.

இந்த டிராக்டர் கஸ்கஞ்ச் மாவட்த்தில் உள்ள பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே வழியில் சென்ற காருடன் மோதாமல் இருக்க டிரைவர் டிராக்டரை திருப்பியுள்ளார். அப்போது சாரதி கட்டுப்பாட்டை இழந்தது டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 5 யாத்ரீகர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இதில் 8 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This