பெங்களூருவில் பிரபல உணவகத்தில் வெடிப்புச் சம்பவம்: 5 பேர் காயம்!

பெங்களூருவில் பிரபல உணவகத்தில் வெடிப்புச் சம்பவம்: 5 பேர் காயம்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல உணவகம் ஒன்றில் இன்று (மார்ச் 1) மதியம் மர்மப் பொருள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கட்டிடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு குண்டனஹல்லி இருக்கிறது பிரபல உணவகமான ராமேஸ்வர கஃபே. இந்தப் பெயரில் நகரெங்கும் பல கிளைகள் இயங்குகின்றன. மக்கள் கூட்டம் எப்போது அலைமோதும் இந்த உணவகத்தின் ராஜாஜி நகர் கிளையில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This