இலஞ்சம் கோரிய போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல் !

இலஞ்சம் கோரிய போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல் !

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நுவரெலியா போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் இருவர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நேற்று திங்கட்கிழமை (4) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேசத்தில் பஸ் ஒன்றின் அனுமதிப்பத்திரத்தை வழங்க இலஞ்சம் கோரியதாக பஸ்ஸின் உரிமையாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நுவரெலியா போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் இருவர்களாவர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This