இலங்கை வருகிறார் சாந்தன்!

இலங்கை வருகிறார் சாந்தன்!

உடல்நலக்குறைவு காரணமாக தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய அரசு அளித்துள்ளது.

இதனால் இன்னும் 10 நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த நிலையில் சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This