யாழ்.பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு ; இருவர் காயம்!
யாழ்.பருத்தித்துறை பகுதியில் மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை இந்த வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில் பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES பிராந்திய செய்தி