தெலுங்கானாவில் 20 தெரு நாய்கள் சுட்டுக்கொலை!
தெலங்கானாவில் 20 தெரு நாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் உள்ள பொன்னாகால் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் 20 நாய்கள் இறந்தும் மேலும் ஐந்து நாய்கள் காயமடைந்தன.
முதற்கட்ட விசாரணையின், காரில் வந்த ஒருவர் இந்த குற்றத்தை செய்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாயத்து அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 429 மற்றும் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அடைக்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized