இம்ரான்கான் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் சுட்டுக்கொலை!

இம்ரான்கான் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் வரும் 8ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான பஜார் பழங்குடியின மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக ரெஹான் ஜெப்கான் போட்டியிடுகிறார். இவருக்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

ரெஹான் ஜெப்கான் சித்திக்காபாத் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ரெஹான் ஜெப்கான் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் உடலில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் வேட்பாளர் ரெஹான் ஜெப்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This