கனடாவில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் சுட்டுக்கொலை!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் சுட்டுக்கொலை!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கவானாக் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூட்டா சிங் கில். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உள்ளூரில் பிரபல தொழில அதிபராக விளங்கி வந்தார். மேலும் அங்குள்ள பஞ்சாபி சமூகத்தினர் இடையே பெரும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This