பிரித்தானியாவில் உக்ரைன் நாட்டவருக்கு விசா நீட்டிப்பு!

பிரித்தானியாவில் உக்ரைன் நாட்டவருக்கு விசா நீட்டிப்பு!

போரால் பாதிக்கப்பட்டு தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டவரின் விசா (நுழைவு இசைவு) காலத்தை மேலும் 18 மாதங்களுக்கு பிரிட்டன் அரசு நீட்டித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போா் 2022 பெப்ரவரியில் தொடங்கி சுமாா் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் 2,80,000 க்கு மேற்பட்ட உக்ரைன் நாட்டவா் பிரித்தானியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில், அகதிகளாக தங்கியுள்ள உக்ரைன் நாட்டவருக்கான விசா மேலும் 18 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

விசா நீட்டிப்பின்படி ஏற்கெனவே பிரித்தானியாவில் தங்கியுள்ள உக்ரைன் நாட்டவா் தங்கள் பணி, சுகாதார வசதி, கல்வி உள்ளிட்ட வசதிகளைத் தொடா்ந்து பெற முடியும்.

‘உக்ரைனில் தொடா்ந்து போா் நீடித்து வருவதால் பிரித்தானியாவில் தங்கியுள்ள உக்ரைனியா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விசா நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்று பிரித்தானிய குடியேற்றத் துறை அமைச்சா் டாம் பொ்ஸ்குலோவ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமைச்சா் டாம் மேலும் கூறுகையில்,

‘உக்ரைனியா்களுடன் பிரித்தானியா உறுதியாக துணை நிற்கிறது. அதேபோல உக்ரைன் மீது சட்டவிரோதமாக போா் நடத்தி வரும் ரஷ்ய ஜனாதிபதி புதினை கண்டிக்கிறோம். மேலும், பல உக்ரைன் குடும்பங்கள் பிரித்தானியாவிடம் தஞ்சமடையும்போது, அதற்கு ஏற்ப நன்கொடை தேவைப்படும்’ என்றாா்.

உக்ரைன் நாட்டவா்களுக்காக உக்ரைன் குடும்பத் திட்டம், உக்ரைன் உதவித் தொகை திட்டம், விசா கால நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களை பிரித்தானிய அரசு செயல்படுத்தி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This